கிறிஸ் கெயில் 
தற்போதைய செய்திகள்

1000 சிக்ஸர்களைக் கடந்த கெயில்: ராஜஸ்தானுக்கு 186 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது.

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது.

13-வது ஐபிஎல் சீசனின் 50-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக ராகுன், மண்டிப் களமிறங்கினர்.

ஆர்சர் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் மண்டிப் ஆட்டமிழந்தார்.

பின் ராகுலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ராஜஸ்தான் பவுலர்களை துவம்சம் செய்தனர்.

ராகுல் 46 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸின் 15வது ஓவரில் வெளியேறினார்.

பின் களமிறங்கிய பூரண் 22 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த கெயில் ஆர்சரின் கடைசி ஓவரில், 63 பந்துகளில் 99 ரன்கள் (8 சிக்ஸ்கள், 6 ஃபோர்கள்) எடுத்திருந்தபோது போல்டானார். 

இன்றைய ஆட்டத்தில் 7வது சிக்ஸரை அடித்தபோது 1,000 சிக்ஸர்களை கடந்த சாதனை படைத்தார்.

பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தனர்.

மேக்ஸ்வெல் (6), தீபக் ஹோடா (1) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT