கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

6 ஆண்டுகளில் 433 பாதுகாப்புப் படை வீரர்கள் தற்கொலை

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் படை வீரர்கள் 36 பேர் 2019-ம் ஆண்டும், 433 பேர் கடந்த 6 ஆண்டுகளிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

PTI

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் படை வீரர்கள் 36 பேர் 2019-ம் ஆண்டும், 433 பேர் கடந்த 6 ஆண்டுகளிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தேசிய குற்றவியல் காப்பகம் தெரிவித்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் மத்திய பாதுகாப்புப் படையில் உள்ள 433 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில், அதிகபட்சமாக 2018 ஆம் ஆண்டு 175 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மத்திய அமைச்சகத்தின் கீழ் மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை, சாஸ்திர சீமா பால், அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை ஆகிய 7 படைகள் உள்ளது.

இந்தப் படைகளில் 9,23,800 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் எல்லைப் பாதுகாப்பு, மத்திய மற்றும் மாநிலங்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ராஜஸ்தான் (5 பேர்), தமிழ்நாடு (4), அருணாச்சல பிரதேசம் (3), ஜம்மு காஷ்மீர் (3), நாகலாந்து (3), திரிபுரா (3) மற்றும் தில்லி (3) ஆகிய மாநிலங்களில் உள்ள 36 பாதுகாப்புப் படை வீரர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புன்னகைப் பூவே... ரெஜினா!

காந்தி பிறந்த நாள்! முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆளில்லா கடை திறப்பு!

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை! | Gandhi jayanti

டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

SCROLL FOR NEXT