முகப்பு
தற்போதைய செய்திகள்

‘வந்தே பாரத்’ திட்டம் மூலம் 13.74 லட்சம் பேர் நாடு திரும்பினர்

கரோனா தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிய 13.74 லட்சம் இந்தியர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:18 PM
கோப்புப்படம்
பகிர்:

கரோனா தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிய 13.74 லட்சம் இந்தியர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை  செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 13.74 லட்சம் இந்தியர்களை செப்டம்பர் 10 வரை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அழைத்து வந்துள்ளோம். 

இந்த திட்டத்தில் ஏர் இந்தியா விமானம், தனியார் மற்றும் வெளிநாட்டு விமானம், வெளிநாட்டு சிறப்பு விமானம் மற்றும் கப்பல்கள் என அனைத்தும் அடங்கும் என கூறினார். 

கரோனா தொற்று காரணமாக உலகளவில் பயணக் கட்டுபாடு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்தவர்களை மீட்க தொடங்கப்பட்டது தான் வந்தே பாரத் திட்டம்.

இந்தத் திட்டம் தற்போது 6-ம் கட்டத்தில் உள்ளது. இது செப்டம்பர் 1-ல் தொடங்கி அக்டோபர் 24 வரை 1,007 சர்வதேச விமானங்களில் 2 லட்சம் பேரை இந்தியாவிற்கு அழைத்து வரவுள்ளது என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.