முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளம், அசாம், மேற்குவங்க தேர்தல்: 4 மணி வாக்குப்பதிவு நிலவரம்

கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. அதிகபட்சமாக அசாமில்  68.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
பகிர்:

கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. அதிகபட்சமாக அசாமில்  68.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

கேரளம்:

கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகின்றது. மதியம் 4 மணி நிலவரப்படி, 58.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அசாம்:

அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் இறுதி கட்டத்தில் 4 மணி நிலவரப்படி 68.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்குவங்கம்:

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் 3ஆம் கட்டத்தில் 4 மணி நிலவரப்படி 68.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →