தற்போதைய செய்திகள்

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா? பள்ளிக்கல்வி செயலாளர் ஆலோசனை

DIN

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தா, ஒத்திவைப்பதா என்பது குறித்து பள்ளிக்கல்வி செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் நாள்தோறும் 4 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து நோய்ப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், திட்டமிட்டபடி தமிழகத்தில் மே 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், பள்ளிக்கல்வி செயலாளர் இன்று மாலை 3 மணியளவில் காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

முன்னதாக ஏப்ரல் 5ஆம் தேதி ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT