தமிழகம் முழுவதும் கடந்த 4 நாள்களில் கரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ. 2.77 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற கரோனா விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையில், கரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் காவல்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 4 நாள்களில் தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதது தொடர்பாக 1.36 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 2.77 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரை தவிர்த்து பிற இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் மட்டும் ரூ. 2.52 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.