சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து 
தற்போதைய செய்திகள்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து; 12ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

DIN

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுமுடக்கமும், பல மாநிலங்களில் இரவுநேர பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் மே 4-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தில்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகலில் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன்பிறகு, மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கரோனா பரவலை கருத்தில் கொண்டு மே 4 முதல் ஜூன் 7ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.

மே 4ஆம் தேதி தொடங்கவிருந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT