தற்போதைய செய்திகள்

கோவாவில் மீண்டும் பொதுமுடக்கம் விதிக்கப்படாது: முதல்வர்

ANI

கரோனா அதிகரித்து வரும் நிலையில், கோவாவில் மீண்டும் பொதுமுடக்கம் விதிக்கப்படாது என முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தொற்றின் பரவலுக்கு ஏற்ப மாநிலங்களே கட்டுப்பாடுகளை விதித்து கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவாவில் நாள்தோறும் 500க்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து முதல்வர் பிரமோத் தெரிவித்தது,

கோவாவில் கரோனா தொற்று அதிகரித்து வருகின்றன, அனைவரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போதைய சூழலில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்த முடியாது. ஆகையால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT