தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,987 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய செய்திகள்தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,987 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,987 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,62,935ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 2558 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 29 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,999ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 4,176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,91,839 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 58,097 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்தாண்டு இதே நாளில் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.