முகப்பு
தற்போதைய செய்திகள்

சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகளுக்கு செல்லத் தடை

தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் மற்றும் கடற்கரைகளுக்கு செல்லத் தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகளுக்கு செல்லத் தடை
பகிர்:

தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் மற்றும் கடற்கரைகளுக்கு செல்லத் தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை நாள்தோறும் வேகமாக பரவி வருவதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து இன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,

நிலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகள், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை அனைத்து நாள்களிலும் செல்லத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.