தற்போதைய செய்திகள்

ஆக்சிஜனுக்கான கலால் வரி ரத்து: மத்திய அரசு

DIN

ஆக்சிஜனுக்கான கலால் வரியை ரத்து செய்வதாக பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்டக் குழு ஆலோசனையில் ஈடுபட்டது.

ஆலோசனை முடிவில், ஆக்சிஜன் தயாரிப்பு, சேமிப்பு தொடர்பான உபகரணங்கள் இறக்குமதி செய்ய விதிக்கப்படும் கலால் வரி, சுகாதார செஸ் வரி உள்ளிட்டவை 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், ஹர்ஷ் வர்தன், பியூஸ் கோயல் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

SCROLL FOR NEXT