விமானப்படை தலைமை தளபதியுடன் மோடி ஆலோசனை 
தற்போதைய செய்திகள்

விமானப்படை தலைமை தளபதியுடன் மோடி ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விமானப்படையின் தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ். பதெளரியாவுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.

ANI

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விமானப்படையின் தலைமை தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ். பதெளரியாவுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.

நாள்தோறும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தேவையான பொருள்களை இறக்குமதி, ஆக்ஸிஜன் தயாரிக்கும் இடங்களில் இருந்து  நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு டேங்கர்களை கொண்டு செல்லும் பணிகளை இந்திய விமானப்படை செய்து வருகின்றது.

இந்நிலையில், விமானப்படையின் தலைமை தளபதியுடன் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதில், ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தேவையான உபகரணங்கள், கரோனா மருந்துகள் மற்றும் டேங்கர்களை விரைவாக எடுத்து செல்வது, விமானப்படையின் கீழ் உள்ள மருத்துவமனைகளை கரோனா சிகிச்சைக்கு மாற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கபட்டதாக தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு காரணம்: உச்ச நீதிமன்றம்

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ்!

இளைஞரைக் கொலை செய்ய திட்டம்: 8 போ் கைது

ரூ.90,000 சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

SCROLL FOR NEXT