முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு - காஷ்மீர்: 2020-ல் பாதுகாப்புப் படையினரால் 221 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர் எல்லைகளில் பாதுகாப்புப் படையினரால் 2020ஆம் ஆண்டு 221 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பாதுகாப்புப் படை
பகிர்:

ஜம்மு - காஷ்மீர் எல்லைகளில் பாதுகாப்புப் படையினரால் 2020ஆம் ஆண்டு 221 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.29 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில், எல்லைகளில் நடந்த அத்துமீறல்கள், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை எழுத்துபூர்வமாக சமர்பிக்கப்பட்டது.

அதில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது,

போர் நிறுத்த விதிமுறையை மீறி 2020ஆம் ஆண்டு ஜம்மு- காஷ்மீர் எல்லைகளில் நடத்தப்பட்ட 5,133  தாக்குதல்களில் பொதுமக்கள் 22 பேர், பாதுகாப்புப் படை வீரர்கள் 24 பேர் பலியாகியுள்ளனர். 

மேலும், தீவிரவாதிகள் ஜம்மு - காஷ்மீர் பகுதியில் 2020ஆம் ஆண்டு நடத்திய 244 தாக்குதல்களில் பொதுமக்கள் 37 பேர், பாதுகாப்புப் படை வீரர்கள் 62 பேர், பாதுகாப்புப் படையின் பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் 221 பேர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →