கரோனா இறப்பு விகிதம் குறைந்து வருகிறது: மத்திய சுகாதாரத்துறை 
தற்போதைய செய்திகள்

கரோனா இறப்பு விகிதம் குறைந்து வருகிறது: மத்திய சுகாதாரத்துறை

கரோனாவால் உயிரிழப்போரின் விகிதம் குறைந்து வருவதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ANI

கரோனாவால் உயிரிழப்போரின் விகிதம் குறைந்து வருவதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா நோய்த் தொற்றின் நிலைமை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய ராஜேஷ் பூஷண் பேசியதாவது,

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 70 சதவீதம் பேர் கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

கடந்த 3 வாரங்களில் 47 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பதிவாகவில்லை. அதே காலகட்டத்தில் 251 மாவட்டங்களில் கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை.

மேலும், நாடு முழுவதும் சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு 5,912 அரசு முகாம் மற்றும் 1,239 தனியார் முகாங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT