தற்போதைய செய்திகள்

‘15 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது’: மத்திய அமைச்சர்

ANI

இந்தியாவிலிருந்து 15 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவைக் கூட்டம் தொடங்கியது.

இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகையில்,

இதுவரை 22 நாடுகளிடமிருந்து கரோனா தடுப்பூசிக்கான கோரிக்கைகளை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றில், ஏற்கனவே 15 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 56 லட்சம் தடுப்பூசிகள் மானிய உதவியாகவும், 1.05 கோடி தடுப்பூசிகள் ஒப்பந்த முறையிலும் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT