விரைவில் அறிமுகமாகும் பிளாக்பெர்ரியின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் 
தற்போதைய செய்திகள்

விரைவில் அறிமுகமாகும் பிளாக்பெர்ரியின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்

பிளாக்பெர்ரியின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன், இந்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பிளாக்பெர்ரியின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன், இந்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.சி.எல் நிறுவனத்துடனான பிளாக்பெர்ரியின் உடன்படிக்கை கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், ஒன்வர்ட் மொபிலிட்டி என்ற நிறுவனத்துடன் உடன்படிக்கை கையெழுத்துட்டுள்ளது.

அண்மையில் நடந்த நேர்காணலில் ஒன்வர்ட் மொபிலிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் பிராங்க்ளின் பேசுகையில்,

இந்த ஆண்டு இறுதிக்குள் பிளாக்பெர்ரியின் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடப்படும். தற்போது ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய பிளாக்பெர்ரி 5 ஜி ஸ்மார்ட்போனை கீபோர்டுடன் உருவாக்கி வருகின்றோம் என கூறினார்.

மேலும், புதிய ஸ்மார்ட்போன் குறித்த வேறு எந்த தகவலும் பகிரப்படவில்லை.

ஒன்வர்ட் மொபிலிட்டி மற்றும் எஃப்ஐஎச் மொபைல் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் மீண்டும் இந்த ஆண்டில் உரிமத்தை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அதிகரித்ததன் காரணமாக பல ஆண்டுகளாக விற்பனை குறைந்து வருவதைத் தொடர்ந்து பிளாக்பெர்ரி 2016 ஆம் ஆண்டு சந்தையிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT