தூத்துக்குடி வாகன விபத்து: ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே செவ்வாய்க்கிழமை காலை சரக்கு வாகனம் கவிழ்ந்து பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே செவ்வாய்க்கிழமை காலை சரக்கு வாகனம் கவிழ்ந்து பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் களை பறிக்க காட்டு வேலைக்கு விவசாய கூலித் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற குட்டியானை எனப்படும் சிறிய வகை சரக்கு வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தில் மணக்காடு - மணப்படை ஊரைச் சேர்ந்த 5 பெண்கள் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.