தில்லியில் மேலும் 145 பேருக்கு கரோனா
தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 145 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 145 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,38,173 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 145 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், ஒருவர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,26,216 பேர் குணமடைந்துள்ளனர். 10,903 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் 1,054 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.