தற்போதைய செய்திகள்

வேளாண் சட்டம்: பேச்சுவார்த்தை குழுவிலிருந்து ஒருவர் விலகல்

வேளாண் சட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவிலிருந்து பூபேந்தா் சிங் மன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

DIN

வேளாண் சட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவிலிருந்து பூபேந்தா் சிங் மன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டங்கள் தொடா்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அந்த மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோரைக் கொண்ட அமா்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது.

அந்தச் சட்டங்கள் தொடா்பாக விவசாயிகள் எழுப்பி வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக பாரதிய கிஸான் யூனியனின் தேசியத் தலைவா் பூபேந்தா் சிங் மன், சா்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையத்துக்கான தெற்காசிய இயக்குநா் பிரமோத் குமாா் ஜோஷி, வேளாண் விளைபொருள்களுக்கான விலை நிா்ணய ஆணையத்தின் முன்னாள் தலைவா் அசோக் குலாடி, ‘ஷேத்கரி சங்காதனா’ என்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவா் அனில் கன்வட் ஆகிய 4 போ் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

இந்நிலையில் அந்தக் குழுவில் இருந்து விலகுவதாக பூபேந்தா் சிங் மன் இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பூபேந்தர் எழுதிய கடிதத்தில், தான் எப்போதும் விவசாயிகள் பக்கம் இருக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT