தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் இரவு நேர பொதுமுடக்கம் ரத்து: முதல்வர்

PTI

ராஜஸ்தானில் இரவு நேரப் பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அசோக் கெலாட் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

கரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் இரவு நேரப் பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. 

கரோனா மறுஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது,

கரோனா பரவல் குறைந்துள்ளதால் இரவு நேரப் பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுகிறது, மேலும் சில தளர்வுகளும் அளிக்கப்படுகிறது. இருப்பினும், பொதுமக்கள் கரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், இல்லையெனில் கரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் எனக் கூறியுள்ளார்.

கரோனா பரவல் அதிகரித்தையடுத்து நவம்பர் 21ஆம் தேதி முதல் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை எட்டு மாவட்டங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT