முகப்பு
தற்போதைய செய்திகள்

மேற்குவங்கம்: எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த முன்னாள் அமைச்சர்

மேற்குவங்க முன்னாள் வனத்துறை அமைச்சர் ராஜீவ் பானர்ஜி(47) தனது எம்.எல்.ஏ. பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
ராஜீவ் பானர்ஜி
பகிர்:

மேற்குவங்க முன்னாள் வனத்துறை அமைச்சர் ராஜீவ் பானர்ஜி(47) தனது எம்.எல்.ஏ. பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் பானர்ஜி கடந்த வாரம் (ஜன.22) வனத்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில், இன்று சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்துள்ளார்.

இதுகுறித்து ராஜீவ் பானர்ஜி கூறியதாவது,

இன்று எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். நான் இன்னும் கட்சியில் உறுப்பினராக தான் இருக்கிறேன். ஆனால் அடுத்தக்கட்ட முடிவுகளை எடுப்பதற்கு மனரீதியாக தயாராக இல்லை. எதிர்வரும் நாள்களில் எனது முடிவை தெரிவிக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் மம்தா பானா்ஜி அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். பின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த  லக்ஷ்மி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை மட்டும் ராஜிநாமா செய்துள்ளார்.

இந்நிலையில், மேலும் ஒரு அமைச்சர் தனது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →