தற்போதைய செய்திகள்

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

DIN

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தோ்வை ரத்து செய்தும், மே 4-ஆம் தேதி முதல் நடைபெற இருந்த பிளஸ் 2 தோ்வுகளை ஒத்திவைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், ஓரிரு நாள்களில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன்பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில்,

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் விரைவில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும்.

மாணவர்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்த பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டியுள்ளது.

இதுபோன்ற மன அழுத்தம் நிறைந்த சூழலில் மாணவர்களை தேர்வு எழுத கட்டாயப்படுத்த முடியாது என்பதால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு, அதற்கான சூழல் வரும்போது தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT