கரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் நேற்றுவரை 624 மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பறிகொடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றது. இதுவரை 3,37,989 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் இன்று இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட செய்தியில்,
நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் போது ஜூன் 2 வரை மொத்தம் 624 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் 30 முதல் 55 வயதுக்குள்பட்டவர்கள் ஆவார்.
அதில் அதிகபட்சமாக தில்லியில் 109, பிகாரில் 96, உத்தரப் பிரதேசத்தில் 79 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.