கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

இரண்டாம் தவணை ரூ. 2,000: டோக்கன் விநியோகம் துவக்கம்

கரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை ரூ. 2,000 மற்றும் நிவாரணப் பொருள்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.

DIN

கரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை ரூ. 2,000 மற்றும் நிவாரணப் பொருள்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் கரோனா நிவாரண நிதியாக ரூ. 4,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, மே மாதத்தில் முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது. இரண்டாம் தவணை ரூ. 2,000 மற்றும் 14 வகை மளிகைப் பொருள்களுக்கு ஜூன் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளன.

இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை இதற்கான டோக்கன் விநியோகிக்கப்படும். ஜூன் 15 முதல் ரேஷன் கடைகளில் காலை 8 மணிமுதல் 12 மணிவரை டோக்கன் அடிப்படையில் மளிகைப் பொருள்கள் மற்றும் இரண்டாம் தவணை ரூ. 2,000 பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT