தற்போதைய செய்திகள்

தனியார் பள்ளிகள் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

DIN

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை பரவலால் நிகழ்வாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமே தொடர்கிறது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பிற்கு 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுருந்தது.

இருப்பினும், பல பள்ளிகளில் முழுக் கட்டணமும் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

சிபிஎஸ்இ, மெட்ரிக், ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ மற்றும் ஐபி பள்ளிகளில் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். மேலும், கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT