தற்போதைய செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே ஆறு வழிச்சாலை திட்டத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

DIN

ஊத்துக்கோட்டை அருகே ஆறு வழிச்சாலை திட்டத்தை கண்டித்து விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை தடுப்பதாக உறுதியளிக்கும் கட்சிக்குதான் வாக்கு என அறிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126.5 கி.மீ. தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகங்களை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுசாலையுடன் இணைக்க ஏற்கனவே சாலை அமைத்துள்ள நிலையில், இந்த துறைமுகங்களை ஆந்திர மாநிலத்துடன் இணைப்பதற்காக சுமார் 3200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தச்சூர் - சித்தூர் 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தச்சூர், கன்னிகைபேர், பெரியபாளையம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் வரை இந்த சாலை அமைக்கப்படவுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் 360 ஹெக்டர் விளைநிலங்களை கையப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்க்கு விவசாயிகள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தும்பாக்கம் அருகே பருத்திமேனிகுப்பத்தில் விளைநிலத்தில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வதாக திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல தங்களது விளை நிலங்களை பறிக்கும் திட்டத்தை ரத்து செய்யும் கட்சிக்கு வாக்களிப்போம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT