முகப்பு
தற்போதைய செய்திகள்

‘மோடிக்கு எதிராக பேசுவது ஜனநாயகத்திற்கு எதிரானது’: சுவேந்து அதிகாரி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடிக்கு எதிராக பேசுவது, ஜானநாயகத்திற்கு எதிரானது என பாஜகவின் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
‘மோடிக்கு எதிராக பேசுவது ஜனநாயகத்திற்கு எதிரானது’
பகிர்:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடிக்கு எதிராக பேசுவது, ஜானநாயகத்திற்கு எதிரானது என பாஜகவின் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க தேர்தல் வரும் 27 முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வர் மம்தா தொடர்ந்து தனது பிரசாரத்தில், மோடியை பற்றியும், தடுப்பூசி பற்றியும் விமர்சித்து வந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள திரிணமூலின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக வேட்பாளருமான சுவேந்து அதிகாரி கூறியதாவது,

கரோனாவுக்கு எதிராக நீங்கள் பிரதமர் மோடியின் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். அவர் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், அவருக்கு எதிராக பேசுவது, ஜனநாயகத்திற்கும், பாரத தாய்க்கும் எதிராக பேசுவதாகும்.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திடம் தடுப்பூசி இல்லை, எனவே நீங்கள் பிரதமர் மோடியின் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →