முகப்பு
தற்போதைய செய்திகள்

குடியரசுத் தலைவர் உடல்நிலை குறித்து ராஜ்நாத் சிங் நேரில் நலம் விசாரிப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடல்நிலை குறித்து நேரில் சென்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நலம் விசாரித்தார்.

Updated On : 26 மார்ச், 2021 at 4:47 PM
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)
பகிர்:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடல்நிலை குறித்து நேரில் சென்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நலம் விசாரித்தார்.

வெள்ளிக்கிழமை காலை லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரிசோதனைக்காக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத் தலைவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது உடல்நிலைக் குறித்து ராணுவ மருத்துவமனைக்கு நேரில் சென்று ராஜ்நாத் சிங் மருத்துவர்களிடம் விசாரித்தார்.

Advertisement

இதனிடையே, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குடியரசுத் தலைவர் நலமாக உள்ளதாகவும், மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.