தற்போதைய செய்திகள்

டவ்-தே புயல்: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

DIN

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து சனிக்கிழமை காலை புயலாக உருவானது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18 ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது. 

இந்த புயலுக்கு மியான்மா் நாடு வழங்கிய ‘டவ்-தே’ என்று பெயா் வைக்கப்படவுள்ளது. இந்த புயல் 150-160 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் காரணமாக, கேரளம், கர்நாடகம், தமிழகம், மகாராஷ்ரம், கோவா, குஜராத் மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தின் கோவை, தேனி, திண்டுக்கல், நீலகரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT