முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனாவால் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ. 50,000 நிவாரணம்: தில்லி முதல்வர்

கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிவாரணமாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிவாரணமாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை லட்சக் கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்ட செய்தியில்,

கரோனாவால் பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக தலா ரூ. 50,000 வழங்கப்படும். வீட்டில் வருமானம் ஈட்டுபவர்கள் உயிரிழந்தால் மாதம் ரூ.2,500 நிவாரணமாக வழங்கப்படும்.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,500-ம், கல்வி செலவுகளை அரசாங்கமே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தில்லியில் 22,111 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →