சென்னையில் அடுத்த 2 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,
வெப்ப சலனமாக அடுத்த 2 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 2 நாள்களாக வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.