பொதுமுடக்கம் நீட்டிப்பு: ஆலோசனை தொடங்கினார் முதல்வர்
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்பாட்டில் வைக்க நடைமுறையில் உள்ள பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்பாட்டில் வைக்க நடைமுறையில் உள்ள பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் இருந்தபோதிலும், நாள்தோறும் 36,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் பத்தாவது தளத்தில் 19 கொண்ட மருத்துவ நிபுணா்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதன்பிறகு, பேரவை கட்சிகளைச் சோ்ந்த 13 பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் ஆலோசிக்கவுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.
இந்த ஆலோசனைகளின் அடிப்படையில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பொது முடக்கத்தை நீட்டிப்பதா அல்லது தளா்வுகளுடன் பொது முடக்கம் அறிவிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.