தற்போதைய செய்திகள்

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி: தமிழக அமைச்சர் நாளை(மே 27) தில்லி பயணம்

DIN

செங்கல்பட்டு நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தி தொடங்குவது குறித்து மத்திய அரசிடம் பேச தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தில்லி செல்லவுள்ளார்.

செங்கல்பட்டில் மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையம் அமைந்துள்ளது. இந்நிறுவனம் கட்டியது முதல் இதுவரை தடுப்பூசி உற்பத்தி தொடங்கவில்லை.

இதனிடையே தடுப்பூசி நிறுவனத்தில் நேற்று நேரடியாக சென்று ஆய்வு நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிய நிதி ஒதுக்கி தடுப்பூசி உற்பத்தி பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், தடுப்பூசி உற்பத்தி தொடர்பாக மத்திய அரசை நேரடியாக சந்தித்து பேசுவதற்காக மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் மற்றும் சில அதிகாரிகள் நாளை தில்லி செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

SCROLL FOR NEXT