கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தலிபான்களின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இலவச கல்வி அளிக்கும் பெண்

ஆப்கானிஸ்தானில் கல்விக்கான தலிபான்களில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், காபூலில் சாலையோர வியாபாரிகளாக சேலை செய்யும் குழந்தைகளுக்கு, ஒரு பெண் இலவசமாக கல்வி வழங்கி வருகிறார்.

DIN

ஆப்கானிஸ்தானில் கல்விக்கான தலிபான்களில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், காபூலில் சாலையோர வியாபாரிகளாக சேலை செய்யும் குழந்தைகளுக்கு, ஒரு பெண் இலவசமாக கல்வி வழங்கி வருகிறார்.

ஆப்கானிஸ்தான கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி மீண்டும் தலிபான்கள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, அந்நாட்டில் மீண்டும் கல்விக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக அமலாக தொடங்கியுள்ளன.

இதற்கு மத்தியில், உயர்நிலைப் பள்ளிப் பட்டதாரியான நஜந்த், காபூலில் உள்ள பூங்காவில் சாலையோரத்தில் உள்ள குழந்தைகளுக்கு நாள்தோறும் குறைந்தது 3 மணிநேரம் இலவசமாக கல்வி கற்பித்து வருகிறார் என டோலோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நாஜித் கூறியதாவது, “ நான் அவர்களுக்கு முதலில் எப்படி படிக்க வேண்டும் போன்ற அடிப்படைக் கல்வியை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். பின்பு, படிப்படியாக கணிதம், குரான் உள்ளிட்டவை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். தற்போது அவர்கள் ஆங்கிலம் கற்க ஆர்வமாக உள்ளனர்.

தங்களுக்கு கல்வி கற்பதில் விருப்பம் இருப்பதாகவும், ஒளிமயமான எதிர்காலத்தை விரும்புவதாகவும் கூறுகின்றனர். 30 மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்கின்றனர்.

இந்தக் குழந்தைகள் முதலில் பிச்சை எடுத்தனர். ஆனால், நான் அவர்களை வேலை செய்ய வேண்டும், பிச்சை எடுப்பதை நிறுத்த வேண்டும் ஊக்குவித்தேன். பிறகு அவர்களைப் படிக்க ஊக்கப்படுத்தினேன். ஊக்கம் அளிப்பது இந்த நேரத்தில் செய்ய வேண்டிய சிறந்த விஷயங்களில் ஒன்றாக நான் நினைக்கிறேன்" என்றார்.

ஷூ பாலிஷ் செய்யும் மாணவர்களில் ஒருவரான ஷிகிப்(வயது 7) கூறுகையில், "நான் படிக்க கற்றுக்கொண்டேன், எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் இப்போது எனக்கு படிக்க தெரியும்.”

தனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டணம் செலுத்தி பாடம் கற்றுக் கொள்ள முடியாததால், இந்த வகுப்புகளில் கலந்து கொள்வதாக மாணவர்கள் கூறியதாக டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT