தற்போதைய செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பிஜிஆர்-34 ஆயுர்வேத மருந்து

PTI

புது தில்லி: ஆயுர்வேத மருந்தான பிஜிஆர்-34 மூன்று மாதங்களுக்குள் சர்க்கரை அளவு குறைவதாகவும், நீரிழிவு சிக்கல்களைத் தடுக்கவும் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆயுர்வேத மருந்து பிஜிஆர்-34 நீரிழிவு சிகிச்சைக்கு  பக்க விளைவுகள் இல்லாமல் பயனுள்ளதாக இருக்கும். 

ஆராய்ச்சியாளர் ரவீந்தர் சிங் தலைமையிலான குழு, இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 100 நீரிழிவு நோயாளிகளுக்கு 12 வாரங்களுக்கு நான்காம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளை நடத்தியது.

இந்த ஆய்வில், ஒரு குழுவில் உள்ளவர்களுக்கு அலோபதி மருந்து சிட்டாகிளிப்டின் வழங்கப்பட்டது. மற்ற குழுவில் உள்ளவர்களுக்கு மருந்து பற்றி தெரிவிக்காமல் பிஜிஆர்-34  ஆயுர்வேத மருந்து வழங்கப்பட்டது.

பிஜிஆர்-34 வழங்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு HbA1c அளவு அடிப்படை மதிப்பு 8-யிலிருந்து கணிசமாகக் குறைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இதேபோல், பிஜிஆர்-34 மருந்தை உட்கொள்வதற்கு முன்பு, சராசரியாக 250mg/dl ஆக இருந்த சர்க்கரையின் அளவு 12-வது வாரத்தில் 114mg/dl ஆகக் குறைந்தது, அதே நேரத்தில் FBS 176-ல் இருந்து 74 ஆகக் குறைந்தது. .

இந்த முடிவுகளின் அடிப்படையில், பிஜிஆர்-34 உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது, இன்சுலின் வெளியீட்டை மாற்றியமைக்கிறது மற்றும் பீட்டா செயல்பாட்டு திறனை வலுப்படுத்துகிறது.

கிளைசெமிக் அளவைக் குறைப்பதில் மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்று ஆய்வு கூறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT