தற்போதைய செய்திகள்

சேலம் அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியல்

சேலம் மாவட்டம்  கொளத்தூரில் இயங்கிவரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் பருத்திக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

கு. இராசசேகரன்

சேலம் மாவட்டம்  கொளத்தூரில் இயங்கிவரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் பருத்திக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொளத்தூரில் பருத்தி ஏலம் நடைபெறும். கொளத்தூர் ஒன்றியம் முழுவதிலும் இருந்தும் கர்நாடக மாநிலம் கோபி, நத்தம் பகுதியில் இருந்தும் தர்மபுரி மாவட்டம் நாகமரை, நெருப்பு, ஏரியூர், பென்னாகரம் பகுதிகளிலிருந்தும் கொளத்தூருக்கு பருத்தி வரும். 

கடந்த வாரம் கிலோ ஒன்றுக்கு ரூ.95 வரை ஏலம் போன நிலையில் இன்று கிலோ ரூ.85-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இடைத்தரகர்கள் மற்றும் வேளாண் விற்பனை அதிகாரிகள் கைகோர்த்துக் கொண்டு பருத்திக்கு மிகக் குறைந்த விலையை நிர்ணயம் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். . 

இடைத்தரகர்களுடன் கைகோர்த்துக் கொண்ட வேளாண் விற்பனை நிலைய அதிகாரிகளை கண்டித்தும் உரிய விலையை நிர்ணயிக்க கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உரிய விலை நிர்ணயிக்க அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கினார் ஸ்டாலின்!

சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

SCROLL FOR NEXT