தற்போதைய செய்திகள்

வேதாரண்யம்: பயிர்  நிவாரணம் கோரி சாலை மறியல்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட  பயிர் பாதிப்புக்கு  நிவாரணம் வழங்கக் கோரி 5 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (ஜன.8) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிராணம் வழங்கவும், மாநில அரசு கோரியுள்ள தொகையை மத்திய அரசு வழங்கிடவும் வலியுறுத்தி சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாணிக்கோட்டகம் கடை வீதியில் நடைபெற்ற மறியலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவகுரு, பாண்டியன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர்கள் ப.முருகானந்தம், ரேவதி பாலகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல, தகட்டூர், மருதூர் தெற்கு, கரியாப் பட்டினம் உள்ளிட்ட 5 மையங்களில் போராட்டம் நடைபெற்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT