தற்போதைய செய்திகள்

நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தொடர்ந்து பொய் கூறி வருகிறது: ஆம் ஆத்மி

DIN

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா எந்த ஒரு தொலைபேசியையும் உடைக்கவில்லை எனவும், அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பொய்கூறி வருவதாகவும் ஆம் ஆத்மி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அதிக அளவிலான டிஜிட்டல் ஆதாரங்களை அழித்ததாகவும், அதனால் விசாரணை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் அமலாக்கத் துறை கூறி வருகிறது. அதில், 14 தொலைபேசிகளை மணீஷ் சிசோடியா அழித்ததாகவும் அவர்களது தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தொடர்ந்து பொய்கூறி வருகிறது. அவர்கள் சிசோடியா 14 தொலைபேசிகளை அழித்ததாக கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர் எந்த ஒரு தொலைபேசியையும் அழிக்கவில்லை. உண்மையில், அந்த 14 தொலைபேசிகளில் 5 தொலைபேசிகள் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வசமே உள்ளது. அதேபோல அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் சிசோடியாவின் வீட்டில் வேலை செய்பவர்கள், அவரது ஓட்டுநர் மற்றும் பணியாட்களின் எண்களும் இடம் பெற்றுள்ளன. அவர்கள் விசாரணை என்ற பெயரில் கேலிக்கூத்து நடத்துகின்றனர். பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத் துறை ஒரு சிறந்த கல்வி அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளனர். அவர்கள் மணீஷ் சிசோடியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT