தற்போதைய செய்திகள்

வீரப்பன் கூட்டாளி மாதையன் மரணம்

வீரப்பன் கூட்டாளி மீசைக்கார மாதையன் இன்று உயிரிழந்தார்.

DIN

வீரப்பன் கூட்டாளி மீசைக்கார மாதையன் இன்று உயிரிழந்தார்.

வீரப்பன் கூட்டாளிகளில் முக்கியமானவர் மீசைக்கார மாதையன். இவர், 1993- இல் வீரப்பன் குழுவிலிருந்து செங்கப்பாடிக்கு தப்பி வந்து கர்நாடக போலீசில் சரணடைந்தார். தொடர்ந்து அவர் மீது நான்கு தடா வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விசாரணை முடிவில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டு மனு விசாரணைக்குப் பின் உச்ச நீதிமன்றம், மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய நான்கு பேரின் ஆயுள் தண்டனையைத் தூக்குத் தண்டனையாக மாற்றியது. இதை எதிர்த்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பப்பட்டது.  ஆனால், அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இதனிடையே குடியரசுத்தலைவர், மனுவை முறையான காலத்தில் பரிசீலனை செய்து முடிக்கவில்லை என்ற சமூக ஆர்வலர்களின் கடுமையான போராட்டத்தோடு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர், குடியரசுத்தலைவர், கருணை மனுவை ஒன்பது ஆண்டுக்காலம் ஆய்வுக்கு உட்படுத்தாமல் வைத்திருந்த காரணத்தினால், இந்த நால்வரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தலைமை நீதியரசர் சதாசிவம், ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் தலைமையிலான முதன்மைஅமர்வு தீர்ப்பு வழங்கியது.  ஜனவரி 2014இல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டாலும், கர்நாடக மாநில அரசும் சிறைத்துறையும் இந்த நால்வரையும் விடுதலை செய்யாமலே சிறையில் அடைத்து வைத்திருந்தன. 

2018, மே மாதம், சைமன்  என்பவரும், 2022, இல் பிலவேந்திரனும் சிறைக்குள்ளேயே உயிரிழந்தனர். 2023-பிப்ரவரியில் சிறுநீரகம் பழுதான ஞானபிரகாசம், பரோலில் வெளியே வந்தார். 31 ஆண்டுகளாக மைசூர் சிறையிலிருந்த, மீசை மாதையன் கடந்த 11, ஆம் தேதி அதிகாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு, நினைவிழந்த நிலைக்குச் சென்றார். முதல் கட்டமாக மைசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு, பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மீசை மாதையன் இன்று மாலை நினைவு திரும்பாமலே உயிரிழந்தார். வீரப்பன் கூட்டாளிகள் என்ற பெயரில் சிறையிலிருந்த கடைசி நபர் இந்த மீசைக்கார மாதையன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT