முகப்பு
தற்போதைய செய்திகள்

'வன்முறை, வெறுப்புணர்வைப் பரப்பும் பாஜக, ஆர்எஸ்எஸ்' - ராகுல் காந்தி பேச்சு

பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பரப்பி ஜனநாயகத்தைத் தாக்குகிறது என்று கர்நாடகத்தில் பிரசாரம் ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:49 PM
பகிர்:

பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பரப்பி ஜனநாயகத்தைத் தாக்குகிறது என்று கர்நாடகத்தில் பிரசாரம் ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். 

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதையடுத்து அங்கு கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் கர்நாடகத்தில் பிடர் மாவட்டத்தில் தேர்தல் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, 'பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பரப்பி ஜனநாயகத்தைத் தாக்குகிறது. 

ஏழைகளிடம் இருந்து பணத்தை பிடுங்கி அவர்களின் 2, 3 பணக்கார நண்பர்களுக்கு அளிக்கிறது. 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு  சாதகமான சூழல் உள்ளது. எனினும் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும். 150 இடங்களை காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும்' என்று பேசியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →