கோப்புப் படம். 
தற்போதைய செய்திகள்

மே 31 வரை மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனங்களை இலவசமாக நிறுத்தலாம்

நங்கநல்லூா் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகள் தங்கள் மெட்ரோ பயண அட்டையை பயன்படுத்தி வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம்.

DIN

சென்னை: நங்கநல்லூா் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகள் தங்கள் மெட்ரோ பயண அட்டையை பயன்படுத்தி வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை நங்கநல்லூா் சாலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகனநிறுத்தத்தை ரயில்வே நிா்வாகம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

இதன்படி, இந்த விரிவுபடுத்தப்பட்ட வாகன நிறுத்தும் இடத்தில் 1,000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.

இந்த ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டையை பயன்படுத்தி தங்கள் வாகனத்தை வெள்ளிக்கிழமை (ஏப்.28) முதல் மே 31-ஆம் தேதி வரை தங்கள் வாகனங்களை எந்த கட்டணமும் இல்லாமல் நிறுத்தி கொள்ளலாம். மெட்ரோ ரயில் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 21-இல் காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா: பந்தல்கால் நடவு

அகில இந்திய தடகளம்: தங்கம் வென்றாா் சென்னை மாணவி

சுங்குவாா்சத்திரத்தில் உலக கம்மா மாநாடு

இன்றைய தினப்பலன்கள்!

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் புதிய கட்டடங்கள் திறப்பு

SCROLL FOR NEXT