தற்போதைய செய்திகள்

திரைப்படத் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி காலமானார்!

திரைப்படத் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார்.

DIN


சென்னை: திரைப்படத் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார்.

புற்றுநோய் காரணமாக கடந்த 8 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ். சக்கரவர்த்தி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.

இவரது மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தினர். திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சனிக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அஜித் நடிப்பில் உருவான வெற்றிப்படமான வாலி, ராசி, வில்லன், சிட்டிசன், முகவரி, ரெட், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு, விக்ரமின் நடிப்பில் உருவான காதல் சடுகுடு, சிம்புவின் நடிப்பில் உருவான காளை, வாலு உள்பட பல படங்களைத் தயாரித்துள்ளார். 

குறைந்த பட்ஜெட்டில் தன்னுடைய மகன் ஜான் நடிப்பில் உருவான ரேனிகுண்டா மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து மகனினில் நடிப்பில் 18 வயதசு படத்தை தயாரித்தார். அது பெரியளவில்லை வெற்றியடவில்லை. 

இறுதியாக விமல் நடிப்பில் உருவான  விலங்கு இணையத்தொடரில் காவல் அதிகாரியாக நடித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT