முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏழுமலையான் தரிசிக்க பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் இன்று சுமார் 24 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
கோப்புப் படம்
பகிர்:

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் இன்று சுமார் 24 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு ரூ.300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசனம் என பல்வேறு வகையான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் இன்று காலை 22 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவர்களுக்கு சுமார் 24 மணி நேர காத்திருப்புக்குப் பின்பு தரிசன அனுமதி வழங்கப்பட்டது.

ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 மணி நேரமும் தேவைப்பட்டது.

சனிக்கிழமை அன்று 75,652 பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இதில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ. 3.21 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →