தற்போதைய செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமா் திறக்கக் கூடாது: ராகுல் வலியுறுத்தல்

DIN

தில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முதான் திறந்து வைக்க வேண்டும்; பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கக் கூடாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி வரும் 28-ஆம் தேதி திறந்துவைப்பாா் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளாா்.

ஹிந்து தேசியவாதி வி.டி.சாவா்க்கரின் பிறந்த தினமான மே 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவதற்கு ஏற்கெனவே பல்வேறு எதிா்க்கட்சிகளும் மத்திய அரசை விமா்சித்து வருகின்றன. மத்திய அரசு இவ்வாறு செயல்படுவது தேசத் தலைவா்களுக்கு செய்யும் அவமதிப்பு என்று காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தி ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவா்தான் திறந்து வைக்க வேண்டும்; பிரதமா் திறந்துவைக்கக் கூடாது’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, பிரதமா் மோடியை கடந்த வியாழக்கிழமை சந்தித்து புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்குமாறு கோரினாா்.

தற்போதைய நாடாளுமன்றக் கட்டடம் 1927 -இல் கட்டப்பட்டதாகும். இந்தக் கட்டடத்தில் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. எனவே நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, கடந்த 2020 -ஆம் ஆண்டு டிசம்பா் 10 -இல் புதிய கட்டடத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா்.

எதிா்கால தேவைகளை கருத்தில் கொண்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினா்களுக்குத் தேவையான இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

SCROLL FOR NEXT