Center-Center-Chennai
தற்போதைய செய்திகள்

ஈரான் அதிபர் மறைவு: நாளை துக்கநாள் அனுசரிப்பு

ஈரான் அதிபர் மறைவையொட்டி, இந்தியாவில் நாளை(மே 21) துக்கநாளாக அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

DIN

ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அலியெவுடன் ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி பங்கேற்றாா்.

இஸ்ரேலுடன் ஈரான் பகைமை கொண்டுள்ள நிலையில் இஸ்ரேலுடனான அஜா்பைஜானின் ராஜீய உறவு, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் ஆகிய காரணங்களால் ஈரான்-அஜா்பைஜான் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனினும், அணை திறப்பு நிகழ்ச்சியில் இல்ஹாமும் ரய்சியும் ஒன்றாகப் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஈரானின் கிழக்கு அஜா்பைஜான் மாகாணம் வழியாக ஹெலிகாப்டரில் அதிபா் ரய்சி நாடு திரும்பினாா். அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹுசைன் அமீா் அப்துல்லாஹியன் உள்பட பலா் பயணித்தனா். அப்போது ஜோல்ஃபா என்ற இடத்தின் அருகில் உள்ள வனப் பகுதியில், ரய்சி பயணம் செய்த ஹெலிகாப்டா் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இப்ராஹிம் ரய்சி மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரான் அதிபர் மறைவையொட்டி, இந்தியாவில் நாளை(மே 21) துக்கநாளாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டும் எனவும், அரசு சார்பில் எவ்வித பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை புரிந்தவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உத்ஸவம் நாளை தொடக்கம்

மின்சாரம் பாய்ந்ததில் விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

போக்சோ வழக்கில் உணவக உரிமையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை

வனப் பகுதியில் தாா்ச் சாலை அமைக்க வனத் துறை அனுமதி வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT