தற்போதைய செய்திகள்

பாஜக எம்எல்ஏவின் பேரன் தற்கொலை!

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவின் பேரன் இந்தூர் நகரில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவின் பேரன் இந்தூர் நகரில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தின் கில்சிபூர் நகரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹஜாரிலால் டாங்கியின் பேரன் விகாஸ் டாங்கி(21), இந்தூர் நகரில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ”விகாஸ் டாங்கி, இந்தூரில் வாடகை வீட்டில் வசித்தபடி, கல்லூரியில் எல்எல்பி படித்து வந்துள்ளார். நேற்றிரவு (மே 20) விகாஸின் நண்பர் ஒருவர் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, விகாஸ் அழைப்பினை ஏற்கவில்லை; நேரில் சென்று பார்த்தபோது, விகாஸ் இறந்து கிடப்பதைக் கண்டார்.

விகாஸ் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில், அவர் ’தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை’ ” என்று எழுதியிருப்பதாக காந்தி நகர் காவல்நிலையப் பொறுப்பாளர் அனில் யாதவ் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் கிடைத்த சில தடயங்களின் அடிப்படையில், ’காதல் விவகாரம் காரணமாக, விகாஸ் தற்கொலை செய்திருக்கலாம்’ என போலீசார் சந்தேகிக்கின்றனர், இருப்பினும் இந்த வழக்கு அனைத்து கோணங்களிலிருந்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று காவல் அதிகாரி கூறினார்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

SCROLL FOR NEXT