முக்கியச் செய்திகள்

ஃபேஸ்புக்கின் அடுத்த ட்ரீட், பின்னூட்டங்களில் GIF இமேஜுகள் புது அறிமுகம்!

ஹரிணி

ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் வெகு நாள் ஆசை ஒன்று நிஜமாகப் போகிறது. கமெண்ட்டுகளில் அனிமேட்டட் கிராஃபிக்ஸ் இமேஜுகளைப் பயன்படுத்த விரும்புவோரின் ஆசையை நினைவாக்கும் பொருட்டு ஃபேஸ்புக் நிறுவனத்தார் அதற்கான முன்னேற்பாடுகளைத் தீவிரப் படுத்திக் கொண்டிருக்கிறார்களாம். கூடிய விரைவில் ஃபேஸ்புக் பயனாளர்கள் தங்களது நட்புகளுக்கு கமெண்ட் இடும் போது அழகழகான அனிமேட்டட் படங்களை லைவ் ஆக அனுப்பும் வசதி ஃபேஸ்புக்கில் கொண்டு வரப்பட இருக்கிறது. அதற்கான சோதனைகள் நடத்தப் பட்டுக் கொண்டு இருக்கின்றன என டெக்கிரஞ்ச்.காம் இணையதளம் ஃபேஸ்புக்கில் அறிவித்துள்ளது.

சோதனைகளுக்குப் பின்பு குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் GIF கமெண்ட் பட்டன்கள், ஃபேஸ்புக் மெஸேஞ்சர் பட்டன்களைப் போலவே தனித்து இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டு பயன்பாட்டுக்கு விடப்படும் எனவும், அதன் வெற்றியைப் பொறுத்து அனைத்து ஃபேஸ்புக் பயனாளர்களும் பயன்படுத்தும் வகையில் கூடிய விரைவில் மாற்றப்படும் என்றும் ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் தொடர்ந்து தனது பயனாளர்களுக்காக தொழில்நுட்பத்தில் புதுப் புது மாற்றங்களை அறிவித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

இதனடிப்படையில், கூடியவிரைவில் மெஸேஞ்சர்களில் டிஸ்லைக் பட்டன்களும் அறிமுகப்படுத்தப் படவிருக்கின்றனவாம். ஃபிப்ரவரியில் ஃபேஸ்புக் தனது ‘ரியாக்ஸன்’  அறிமுகத்தின் முதல் வருட விழாவைக் கொண்டாடிய போது மொத்தம் 300 பில்லியன்  ‘ரியாக்ஸன்கள்’ ஃபேஸ்புக் பதிவுகளில் பயன்படுத்தப் பட்டதாக பதிவு செய்திருந்தது. அதில் மிக அதிக பயனாளர்களால் பயன்படுத்தப் பட்ட ரியாக்ஸன் எது தெரியுமா? லவ் ரியாக்ஸன் தான். சுமார் 1.79 பில்லியன் பயனாளர்கள் இந்த லவ் ரியாக்ஸன்களைத் தங்களது ஃபேஸ்புக் பதிவுகளில் பயன்படுத்தி இருக்கிறார்களாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT