சிறப்புச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா? தமிழறிஞர் கல்யாண்ஜி

சிறுகதைகள் வண்ணதாசன் என்னும் புனைப்பெயரிலும் புதுக்கவிதைகள் கல்யாண்ஜி என்னும் புனைப்பெயரிலும் எழுதும் படைப்பாளி கல்யாண்ஜி

DIN


சிறுகதைகள் வண்ணதாசன் என்னும் புனைப்பெயரிலும் புதுக்கவிதைகள் கல்யாண்ஜி என்னும் புனைப்பெயரிலும் எழுதும் படைப்பாளி கல்யாண்ஜி எனப்படும் எஸ். கல்யாணசுந்தரம். இவர் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் திருநெல்வேலியில் மூத்த எழுத்தாளரும், இலக்கியவாதியுமான தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன்.

சிறுகதை புதுக்கவிதை என இரண்டு துறைகளிலும் தனது இலக்கியப் பங்களிப்பை அறுபதுகளில் எழுதத் தொடங்கிய வண்ணதாசன் 170 சிறுகதைகள் 186 புதுக் கவிதைகள்.  “சின்னு முதல் சின்னுவரை“ என்ற குறுநாவல், என ஆயிரத்து இருநூறு பக்கங்கள் எழுதியுள்ள எழுத்தாளர் இவர்.  வண்ணங்களின் தாசனாக நிறைய ஓவியங்களையும் வரைந்துள்ள இவரது `எல்லோர்க்கும் அன்புடன்’ எனும் பெயரில் இவரது கடிதங்கள் தொகுக்கப்பட்டு நூலாக வந்துள்ளது.  மேலும் தேர்ந்தெடுத்த கவிதைகளின் குறுந்தகடு, கல்யாண்ஜி குரலிலேயே வாசிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. தீபம் இதழில் சிறுகதை ஆசிரியராக 1962 முதல் தனது பணியைத் தொடங்கி எழுதி வருபவர்.

குடும்பம்: மனைவி வள்ளி அவர்கள். பிள்ளைகள் சிவசங்கரி, நடராஷ சுப்ரமணியம். சிவசங்கரிக்குத் திருமணமாகி அர்ச்சனா என்ற மகள் உள்ளார். நடராஷசுப்ரமணியத்திற்கு ஜுலை (2009) மாதம் திருமணம் நடைபெற்றது. கல்யாண்ஜி திருநெல்வேலியில் வசித்து வருகிறார்.

சிறுகதைத் தொகுப்புகள்:
* கலைக்க முடியாத ஒப்பனைகள்
* தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
* சமவெளி
* பெயர் தெரியாமல் ஒரு பறவை
* மனுஷா மனுஷா
* கனிவு
* நடுகை
* உயரப் பறத்தல்
* கிருஷ்ணன் வைத்த வீடு
* ஒளியிலே தெரிவது (உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டில் சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது)
* சில இறகுகள் சில பறவைகள்
 
புதினங்கள்:

*  சின்னு முதல் சின்னு வரை

கவிதைத் தொகுப்பு:
* பா
* புலரி
* முன்பின்
* ஆதி
* அந்நியமற்ற நதி
* மணல் உள்ள ஆறு

கட்டுரைகள்: அகமும் புறமும்
கடிதங்கள்: வண்ணதாசன் கடிதங்கள்

விருதுகள்: இலக்கியச் சிந்தனை, லில்லி தேவசிகாமணி, திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசுகள், சிற்பி விருது, இசை அமைப்பாளர் இளையராஜா வழங்கிய `பாவலர் விருது’ மற்றும் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி முதலிய விருதுகளும், பரிசுகளும் பெற்று எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்று கொண்டிருப்பவர். இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.

திருநெல்வேலியைச் சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், நம் அனைவருக்கும் சொந்தமான இவர், சிறுகதை புதுக்கவிதை என இரண்டு துறைகளிலும் தனது இலக்கியப் பங்களிப்பை நல்கி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT