மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் ஆத்திச்சூடியை குறிப்பிட்டுப் பேசினார்.
மூன்று மூன்று வார்த்தைகளில் பல முக்கிய விஷயங்களை ஔவையார் அழகுத் தமிழில் சொல்லியிருக்கிறார்.
அதில் குறிப்பாக 'பூமி திருத்தி உண்' என்ற மூன்று வார்த்தைகளில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை ஔவையார் கூறியுள்ளார் என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:56 AM
அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு
இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு 284 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
வேளாண் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த 16 கட்டங்களாக திட்டம் இயற்சி செயல்படுத்தப்படும்
தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்.
20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும்.
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:54 AM
மத்திய அரசின் கடன் குறைந்துள்ளது
மத்திய அரசின் கடன் 52%ல் இருந்து தற்போது 48.7% ஆகக் குறைந்திருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
வேளாண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:51 AM
பட்ஜெட் உரையில் காஷ்மீரி மொழியில் பேசிய நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிர்மலா சீதாராமன், காஷ்மீர் மொழியில் பேசினார்.
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:50 AM
கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 சதவிகிதத்தில் இருந்து 48 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:46 AM
எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி
எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறை ஏப்ரல், 2020 முதல் அமல்படுத்தப்படும்.
நடுத்தர குடும்பத்தின் வருவாயை அதிகரிக்க மத்திய பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம்பெறும்.
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:45 AM
இந்தியாவின் பொருளாதாரத்தின் மீது அதீத நம்பிக்யை ஏற்படுத்தும் வகையில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
ஜிஎஸ்டி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது மோடி அரசின் மிகச் சிறந்த சாதனையாக உள்ளது.
இந்தியா தற்போது உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடுத்தர குடும்பங்களின் அன்றாட செலவு 4% குறைந்து சேமிப்பாக மாறியுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:40 AM
சிறுபான்மையினர், பெண்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்கும்.
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:38 AM
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாக்குர் ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:38 AM
உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள பட்ஜெட் நகல்கள் தீவிர கண்காணிப்புக்குப் பிறகு அனுமதி
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:37 AM
நிதியமைச்சர் நிர்லமலா சீதாராமன் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் நாடாளுமன்றம் வருகை
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:33 AM
மத்திய பட்ஜெட் தாக்கல்
2020 - 21ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:18 AM
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:17 AM
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:15 AM
மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பிரிண்ட் செய்யப்பட்ட பட்ஜெட் கோப்புகள் நாடாளுமன்றத்துக்கு எடுத்து வரப்பட்டன.
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:03 AM
2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார்.
நாட்டின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், அதை மேம்படுத்தும் வகையில் பல புதிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு தாக்கல் செய்யவிருக்கும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:01 AM
பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருகை
மத்திய பட்ஜட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நாடாளுமன்றம் வந்தார் பிரதமர் மோடி.
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 5:01 AM
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தார்.
Updated On : 1 பிப்ரவரி, 2020 at 12:29 AM
வருமான வரி விகிதம் மாற்றம்
புதிதாக குறைக்கப்பட்டிருக்கும் வருமான வரி விகிதங்கள் அனைவருக்கும் அப்படியே பொருந்தாது. அதில், வரி செலுத்துவோருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது ஒருவர் தனக்கு ஏற்கனவே வீட்டுக் கடன், 80சி, மருத்துவக் காப்பீடு, வீட்டு வாடகை அலவன்ஸ், இதர வரிக்கழிவுகள் போன்றவற்றுக்குக் கிடைக்கும் வரிச் சலுகையையே தக்க வைத்துக் கொள்ள விரும்பினால் பழைய விகிதப்படியே வரி செலுத்த வேண்டியதிருக்கும்.
அல்லாமல், ஏற்கனவே இருக்கும் வரிச் சலுகைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, புதிய முறையை தேர்வு செய்து கொண்டால் மட்டுமே இந்த வரிக் குறைப்பு விகிதங்கள் பொருந்தும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
Updated On : 31 ஜனவரி, 2020 at 9:49 PM
மிக நீண்ட பட்ஜெட்
2020 - 21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளிலேயே மிக நீண்ட பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டை முற்பகல் 11 மணிக்கு வாசிக்கத் தொடங்கிய நிர்மலா சீதாராமன், சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக பட்ஜெட் உரையை தொடர்ந்தார். ஆனால், திடீரென அவருக்கு அதிக வியர்வை ஏற்பட்டு, கடைசியாக இரண்டு பக்கங்கள் இருக்கும் போது தொடர்ந்து வாசிக்க முடியாமல், பட்ஜெட் உரையை சுருக்கமாக வாசித்து முடித்தார்.
Updated On : 31 ஜனவரி, 2020 at 8:05 PM
பான் அட்டை பெறும் நடைமுறை எளிதாக்கப்படும்
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அவசியமாக பான் அட்டை பெறும் நடைமுறை எளிதாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைன் முறையில் பான் கார்டு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Updated On : 31 ஜனவரி, 2020 at 7:58 PM
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு
நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி குறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு இதுவரை இருந்த 20%வருமான வரி 10 % ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேப்போல ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 20%ல் இருந்து 15% ஆகக் குறைக்கப்படுகிறது.
மேலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 30%ல் இருந்து 20% ஆகக் குறைக்கப்படுகிறது.
ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% இருந்து 25% ஆகக் குறைக்கப்படுகிறது.
ரூ.15 லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும்.
Updated On : 31 ஜனவரி, 2020 at 7:40 PM
நாட்டின் மூலதன செலவினங்கள் 30 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
அரசின் நிதிப் பற்றாக்குறையானது 2019 - 20 ஆம் நிதியாண்டில் 3.8 சதவீதமாகவும், 2020 - 21 ஆம் நிதியாண்டில் 3.5% ஆகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் வரும் நிதியாண்டில் ரூ.2.1 லட்சம் கோடி நிதி திரட்டப்படும்.
தொழில்துறை மற்றும் வர்த்தகத்துறை மேம்பாட்டுக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கப்படும்.
Updated On : 31 ஜனவரி, 2020 at 7:39 PM
வரும் 2020 -21 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதத்தை எட்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், 2020 - 21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 10% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மூலதன செலவினங்கள் 30 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.