முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வர் உடல் நலம் பாதிப்பு: அதிமுக தொண்டர் விஷம் குடித்து தற்கொலை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தமிழக முதல்வரின் உடல் நலக்குறைவு குறித்த வதந்தியால் மனஉளைச்சலில் இருந்த அதிமுக தொண்டர் சரவணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:25 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தமிழக முதல்வரின் உடல் நலக்குறைவு குறித்த வதந்தியால் மனஉளைச்சலில் இருந்த அதிமுக தொண்டர் சரவணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வடுகபட்டி, நடுத்தெருவைச் சேர்ந்தவர் மு.சரவணன் (60). அதிமுக வின் தீவிர தொண்டரான இவர் கடந்த 15 ஆண்டுகளாக கட்சிப் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வர் உடல் நலம் பதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததில் இருந்தே மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முதல்வர் குறித்த சில வதந்திகளை கேட்டுள்ளார். இதனால் மனம் வருத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த இவரைப் பார்த்த மகள், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர். இது குறித்து மகள் பொன்மணி, நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →